டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தற்போது டீசல் கையிருப்பு தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபையால் தனியார் பஸ்களுக்கு டீசல் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளின் சேவை 25% இற்கும் மேல் குறைவடையும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)