நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் தமது கட்சியின் பிரதிநிதித்துவம் தேவையென்றால் அவருக்கு பல தேசியப்பட்டியல் ஆசனங்களை வழங்குவதில் பிரச்சினை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் முதிர்ந்த அரசியல்வாதியாக இருந்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை தேடினால் தமது கட்சி அதற்கு ஆதரவளிக்கும் எனவும் இத்தருணத்தில் கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் நாட்டை பலப்படுத்த இணங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் குறைகள் இருப்பின் அடுத்த தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாராக இருப்பதாகவும், தற்போதைக்கு தாம் விரும்பும் கட்சியை வளர்ப்பதை விட நாட்டின் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு கட்சி முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்காலத்தில் தமது கட்சி சுயாதீனமாக பாராளுமன்றத்தில் செயற்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டத்திற்கு புதிய பிரதமர் ஆதரவளிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)