உள்ளூர் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார ஆணையம் நேற்று (02) இரவு இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின்படி, வெள்ளை – சிவப்பு நாடு அரிசி கிலோ ஒன்றின் விலை 220 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெள்ளை – சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 230 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 260 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நுகர்வோர் விவகார ஆணையம் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதுடன், அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.