இன்று (23) காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.