கூட்டுத்தாபனம் எச்சரிக்கிறது
எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் டீசல் மற்றும் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது டீசல் மற்றும் பெற்றோல் இருப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள டீசல் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது 70,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் ஏற்றிச் வந்த கப்பல், 37,500 மெற்றிக் தொன் பெற்றோல் கொண்ட கப்பல் மற்றும் சுமார் 26,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் இலங்கைக்கு வந்துள்ள போதிலும், எரிபொருளை இறக்குவதற்கு டொலர்கள் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடனுதவியின் கீழ் இரண்டு டீசல் கப்பல்கள் மே 15 மற்றும் 17 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளன. டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் பற்றாக்குறையால், மின் உற்பத்திக்கு அவற்றை வழங்க முடியாது என்றும் அதனால் மின்வெட்டு அதிகரிக்கலாம் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)