எரிபொருளில் நீர் கலக்கப்பட்டவை உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருளில் நீர் கலக்கப்பட்டவை உறுதி!

எல்பிட்டிய குருதுகஹஹதெப்மவில் உள்ள கரந்தெனிய பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து நேற்று (28) வெளியிடப்பட்ட மண்ணெண்ணெய்யில் நீர் கலந்துள்ளதாக கொழும்பு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அன்றைய தினம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளினால் கையிருப்பு நிரப்பப்பட்ட மண்ணெண்ணையை பரிசோதித்ததில் அதில் நீர் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக கரந்தெனிய பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் என்.டி.அமரதுங்க தெரிவித்தார். 

நிலத்தடி நீர்த்தேக்கத்தின் குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மண்ணெண்ணெய்யுடன் நீர் கலந்திருக்கலாம் என நம்பப்படுவதாக பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு, கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சிய வளாகத்தில் இருந்து குறித்த மண்ணெண்ணெய்த் தொகை நேற்று (28) அதிகாலை 5.45 மணியளவில் கறுவாத்தோப்பு நிரப்பு நிலையத்தை வந்தடைந்தது. கறுவாத்தோப்பு நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் கூறுகையில், மண்ணெண்ணெய்யை அதிகபட்சமாக ரூ.500 இர்கு விநியோகிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மண்ணெண்ணெய்யில் தண்ணீர் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

எரிபொருள் விநியோகத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகாரிகள் நிறுத்தியதாகவும், சம்பவம் தொடர்பில் கூட்டுறவுச் சங்கத் தலைவருக்கு அறிவித்ததாகவும் பொது முகாமையாளர் என்.டி.அமரதுங்க மேலும் தெரிவித்தார்.

மண்ணெண்ணெயில் இருந்து நீரை பிரித்தெடுப்பதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டதாகவும், பின்னர் சுத்தமான மண்ணெண்ணையை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை கடந்த 28 ஆம் திகதி நண்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் கரந்தெனிய பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் சாந்த விஜேரத்ன தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.