59 சமூக ஊடக குழுமங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

59 சமூக ஊடக குழுமங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸார்!

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது.

அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக 59 சமூக ஊடக குழுக்களும் அவற்றின் நிர்வாகிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பல்வேறு சமூக ஊடக தளங்களில் இயங்கும் குழுக்கள் மூலம்  மக்களை திரட்டியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சமூக ஊடக குழுக்கள் மற்றும் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறியுள்ள பொலிஸார், இது தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டியது கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். (யாழ் நியூஸ்)

🔵 நமது Telegram குழுமத்தில் இணைய கீழே உள்ள Link இனை Click செய்யவும்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.