பிரபல வர்த்தகரான டட்லி சிறிசேன மகாவலி அமைச்சர் பதவியை தனக்கு வழங்காமல் இருக்க 500 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெரிய தொகைக்கு அமைச்சை வாங்கியது யார் என்பது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் ஊடாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“மகாவலி இராஜாங்க அமைச்சர் பதவியை ரொஷான் ரணசிங்கவிடம் இருந்து நீக்கி, அதனை இன்னொருவருக்கு வழங்கியது, 500 மில்லியன் ரூபாவிற்காக, அதற்கு காரணம் என்னவென்றால் ரொஷானிடம் அமைச்சுப் பதவி இருந்தால், எனது அண்ணனின், மைத்திரிபால சிரிசேனவின் அரசியலுக்கு பாதகம் ஏற்படுத்தும் என திரு. டட்லி சிறிசேன தெரிவிக்கின்றார் ”