எவ்வாறாயினும், நாட்டிற்காக அந்த கடினமான முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தனது விருப்பத்தின் பேரில் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்து புதிய பிரதமராக நியமித்ததாகவும், அந்த நம்பிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)