நேற்று (09) இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காலி முகத்திடலுக்கு வந்த ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அத்துடன் வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்திற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் நேற்று (09) நிட்டம்புவவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது உயிரிழந்துள்ளார்.
மாகும்புர பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பயணித்த கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சிறு காயங்களுடன் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை சேதப்படுத்தியுள்ளனர். (யாழ் நியூஸ்)

நீங்கள் சமையல் செய்ய ஆர்வம் உடையவரா?
ஊரடங்கு அமுலில் இருக்கும் போது வீட்டில் இருக்கும் உங்களுக்கு சமையல் குறிப்புகள் மற்றும் இலகுவான வடிவில் வீடியோக்களுக்கு
Jazees Recipes YouTube Channel

இனை Subscribe செய்யுங்கள்
Link: https://youtube.com/c/JazeesRecipes