கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பல பகுதிகளுக்கு இம்மாதம் 21 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 8.00 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் கொழும்பு 12,13, 14,15 ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும். அத்துடன் கொழும்பு 01 முதல் 11 பிரதேசங்களுக்கு இந்த காலப்பகுதியில் குறைந்த அழுத்த நீர் விநியோகம் வழங்கப்படும். (யாழ் நியூஸ்)