மிரிஹான மோதலின் வாகனங்கள் அரசாங்கத்தின் கைக்கூலிகளால் தீக்கிரையாக்கப்பட்டதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அப்பாவி மக்களை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்த கலவரத்திற்கு காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சரும் காரணம் என்றும் அவர் கூறினார்.
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மக்களின் போராட்டத்தை தடுக்க முடியாது எனவும், நாட்டை உருவாக்க முடியாவிட்டால் அரசாங்கத்தை கையளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுனில் வட்டகலவும் கலந்துகொண்டார். (யாழ் நியூஸ்)