நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், நாட்டின் விற்பனை வரியை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று நிதியமைச்சர் அலி சப்ரி பிபிசியிடம் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டில் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) விகிதத்தை 8% ஆக பாதியாகக் குறைத்தபோது அரசாங்கம் தவறு செய்ததை ஒப்புக்கொண்டாதாக பிபிசிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலின் போது தெரிவித்தார்.
தினசரி அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அடுத்த எட்டு மாதங்களில் நாட்டுக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
“வரிகளை அதிகரிக்க வேண்டும். எங்களிடம் உள்ள வருவாய் மற்றும் செலவின இடைவெளியைக் குறைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை நம்பியிருக்கும் இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு தற்போதைய மதிப்பு கூட்டப்பட்ட வரியின் நிலை "நிச்சயமாக நிலையானது அல்ல" என்று கூறிய அவர், விகிதம் 13% அல்லது 14% ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் 2019 இல் வரிகளை குறைக்கும் நடவடிக்கை தவறானது என்பதை ஒப்புக்கொண்ட அவர், உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை அழைப்பதற்கு முன்பு அரசாங்கம் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும் கூறினார். (யாழ் நியூஸ்)