ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் நீக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று (22) இரவு இதனை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அத்துடன் அக்கட்சியின் சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச் எம் எம். ஹரீஸ், எம் சி பைஸால் காசிம், எம்.எஸ். தௌபீக் ஆகியோர் கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு தாருஸ் ஸலாமில் கூடிய உயர்பீட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அரசின் சில சட்டமூலங்கள், வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், எம்.சி. பைஸால் காசிம் , எம்.எஸ். தௌபீக் ஆகியோர் அண்மையில் அரசுக்கான தமது ஆதரவை விலக்கி கொண்டிருந்தனர்.
அதே போன்று நஸீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.