நாளைய தினம் (04) இலங்கை மின்சார சபை கோரிய 07 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நுகர்வோர் வசதிக்காக இரண்டு நேர இடைவெளிகளில் 05 மணி நேரத்திற்கும் குறைவாக, அதாவது பகல் நேரத்தில் 03 அல்லது 04 மணிநேரமும், இரவு 10 மணிக்கு முன்னதாக 1 அல்லது 2 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய, A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், நாளை காலை முதல் மாலை வரையில் 3 முதல் 4 மணித்தியாலங்களும், மாலை முதல் இரவு 10 மணிக்கிடைப்பட்ட காலப்பகுதியினுள் 1 முதல் 2 மணித்தியாலங்களும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)