போராட்டக்காரர் ஒருவரின் மரணம் குறித்து சமூக ஊடக தளங்களில் பரவி வரும் செய்திகளை இலங்கை காவல்துறை மறுத்துள்ளது.
அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இராணுவத்தினரிடம் கோரிய மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கு எதிராக நின்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
போராட்டத்தின் போது பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், பொலிஸாரின் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், சமூக ஊடக தளங்களில் பரவி வரும் செய்திகளை மறுத்து இலங்கை காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற பொய்யான செய்திகளுக்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். (யாழ் நியூஸ்)