பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்திய நபர் கைது! (CCTV)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்திய நபர் கைது! (CCTV)

துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும் பளிங்கு மற்றும் உலோகத் துகள்களைப் பயன்படுத்தி தனியார் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதம் விளைவித்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் வங்கி, நிதி நிறுவனம், ஸ்பா, பாலர் பாடசாலை, பஸ் உட்பட இரண்டு வாகனங்கள் உட்பட பிலியந்தலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள 09 நிறுவனங்களை இந்த நபர் சேதப்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கல்கிசை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரை தம்பே பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

மேலும் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் வாகனம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் ஒரு சொகுசு வாகனத்தில் இருந்த போது மற்றொரு நபருடன் சேர்ந்து சொத்துக்களை சேதப்படுத்திய பல இடங்களில் சிசிடிவி காட்சிகள் தெளிவாக காட்டின .

சந்தேகநபர் 34 வயதுடைய ஆன்லைன் வர்த்தகம் நடத்தும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பிலியந்தலை பகுதியை சேர்ந்த தனது நண்பருடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

✅ Join our WhatsApp Group:

எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்துதவிர்த்துக்கொள்ளவும்.

https://chat.whatsapp.com/E40k0D3G50eE9N014tGfEq


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.