அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு சொந்தமான அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி விடுவிக்கப்பட்டுள்ளார்.
அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பௌசி மீது வழக்கு தொடரப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, 2016 ஆம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக பௌசிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது.
2010 ஆம் ஆண்டு முதல் 14 ஆம் ஆண்டு வரை அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு சொந்தமான வாகனத்தை உடமையாக வைத்திருந்தமை மற்றும் பயன்படுத்தியமை தொடர்பில் பௌசிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பின்னர் புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தமக்கு உரிமை உண்டு என்று வழக்கை வாபஸ் பெற தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் அறிவித்ததையடுத்து முன்னாள் அமைச்சர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)