எத்தியோப்பியா போன்ற ஏனைய நாடுகளைப் போன்று வாரத்திற்கு ஒரு முறை எரிவாயு விநியோகம் செய்யும் நாடு இலங்கை அல்ல என்பதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் வர்த்தக அமைச்சர், இலங்கை மட்டுமன்றி முழு உலகமும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலும் மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளதாக கூறினார்.
“எத்தியோப்பியா போன்ற மற்ற நாடுகளைப் போலல்லாமல், வாரத்திற்கு ஒரு முறை எரிவாயு, வாரத்திற்கு இரண்டு முறை பெட்ரோலை விநியோகிக்கும் இலங்கையர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். 1930 களில் இருந்து உலகம் எதிர்கொள்ளும் மோசமான பொருளாதார நெருக்கடி இதுவாகும்” என்று அவர் கூறினார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அரசியல்வாதிகளின் பேராசையே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை தீர்ப்பதற்கு 2006 ஆம் ஆண்டு முதல் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)