ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்தால் நாட்டின் அடுத்த போக்கு என்ன என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனநாயகத்தின் கோட்பாடுகளை மீறி அரசாங்கங்களை மாற்ற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
"இன்று கோட்டா வீட்டுக்குப் போ என்று சொல்வீர்கள். ஆனால் நாளை அவர் பதவி விலகினால் என்ன திட்டம்? யார் வழிநடத்துவார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
மக்களின் கோபத்தை தணிக்க அரசாங்கம் முதலில் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)