தங்கொடுவையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் வென்னப்புவ எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் எரிபொருள் எடுக்க வந்த இருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்கொடுவ - நீர்கொழும்பு பிரதான வீதியின் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இரண்டு நாட்களாக காத்திருந்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதி நேற்று (9) திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கொடுவ வீதியிலுள்ள தம்பரவில எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற வந்த 50 வயதுடைய நபரும் உயிரிழந்துள்ளார்.
காரில் எரிபொருள் நிரப்பிவிட்டு காரின் சில்லுகளுக்கு வாயு நிரப்ப சென்றபோது திடீரென உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)