இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைப்பாட்டை தெரிவித்து மகாநாயக்கர்களுக்கு ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளார்.
அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“மகாநாயக்க தேரர்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் எழுத்து மூலம் கௌரவ ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை வழங்கினார்.
அதன் பிரகாரம், ஜனாதிபதி இது தொடர்பில் கவனத்தை ஈர்த்து, மேன்மைதங்கிய மகாநாயக்க தேரருக்கு தனது பதிலை எழுத்துமூலம் அறிவித்தார். இதன்படி, நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையைத் தணிக்கவும், மக்களின் நலனை உறுதிப்படுத்தவும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்திலும் இது தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் மாண்புமிகு மகாநாயக்கர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)