ஜனாதிபதி - பிரதமருக்கிடையிலான இன்றைய சந்திப்பின் போது காபந்து அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
11 கட்சிகளின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது புதிய பிரதமரை நியமித்தல் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அடங்கிய காபந்து அரசாங்கத்துக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகி அந்த இடத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.