இடைக்கால அரசாங்கத்திலும் தானே பிரதமர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை இல்லாவிட்டாலும் இடைக்கால அரசுகள் எப்படி அமைக்கப்படும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வரலாறு தெரியாத ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களே தன்னை பதவி விலகுமாறு கூறியதாக கூறிய அவர், பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது நாடு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதை ஒப்புக்கொண்ட அவர், நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் பலம் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
வரலாற்றில் நாடு இன்னும் மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்ட பல சந்தர்ப்பங்கள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவுள்ளதாக தெரிவித்த அவர், அவ்வாறு செய்யாவிட்டால் தொடர்ந்தும் அவர்களுக்கு போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் எனவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)