இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இந்த வார இறுதிக்குள் மீண்டும் அதிகரிக்கும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ பால்மாவின் விலை 800 ரூபாவால் அதிகரிக்கும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பால்மாவுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதால், பால் மா நிறுவனங்கள் இஷ்டத்துக்கு விலையை அதிகரிக்கலாம் என்று கூறிய அவர், பால்மா எவ்வளவு அதிகரிக்கும் என்று கூற முடியாது என்றார். (யாழ் நியூஸ்)