முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அதிகளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அதேநேரம், இன்று முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வீட்டின் ஒரு பகுதிக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.