அவரது முடிவு திங்கட்கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் பங்களிப்புடன் இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தமையே இதற்குக் காரணம். அந்த அரசாங்கத்தில் புதிய அமைச்சரையும் நியமிக்கும். அந்தச் சூழ்நிலையில் பிரதமர் பதவியில் நீடிப்பது இன்னும் சவாலாகவே உள்ளது.
எவ்வாறாயினும், தான் பதவி விலகப் போவதில்லை என்றும், ஜனாதிபதி பதவி விலக்க மாட்டார் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் பிரதமர் இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)