சூடுபிடித்த கலந்துரையாடல்; எதிர்கட்சியில் அமரவிருக்கும் பிரதமர் மஹிந்த??

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சூடுபிடித்த கலந்துரையாடல்; எதிர்கட்சியில் அமரவிருக்கும் பிரதமர் மஹிந்த??


புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் கடந்த 17ஆம் திகதி இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் சுற்று சூடுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புதிய முகங்கள் பலரைக் கொண்ட அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்து இந்தக் கூட்டத்தில் பிரேரணையை சமர்ப்பித்துள்ள போதிலும், அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் ஜனாதிபதியின் யோசனைகள் நிறைவேற்றப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

புதிய நியமனங்களை வழங்குவதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சரவை அமைச்சர்களையும் இராஜினாமா செய்ய ஜனாதிபதி முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து தற்போதைக்கு இராஜினாமா செய்யத் தயாரில்லை எனத் தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறு நடந்தால் தனக்கும் தனது குழுவினருக்கும் எதிர்க்கட்சியில் அமருவதைத் தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)

எமது வாட்சப் குழுமத்தில் இணைந்து கொள்ளவும். 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.