ஜுமுஆத் தொழுகை என்பது ஒரு மகத்தான அமலாகும். அதனை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் ஒழுங்குகளும் முறைகளும் உள்ளன. குறிப்பாக மார்க்க அறிஞர்கள் அதற்கான சட்ட வரையறைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வடிப்படையிலேயே ஜுமுஆத் தொழுகையை நாம் எமது நாட்டில் அன்று தொட்டு இன்று வரைக்கும் நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றோம்.
ஆகவே, எமது ஜுமுஆக்களை பொது இடங்களிலும் ஆர்ப்பாட்ட மைதானங்களிலும் அமைத்துக் கொள்ளாது மஸ்ஜித்களிலேயே அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா