இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிய கடிதத்தில் தனது பதவி விலகலை அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) எடுத்த தீர்மானத்திற்கு அமைவாகவே தனது இராஜினாமா செய்துள்ளதாக சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், பாராளுமன்றத்தில் சுயேட்சை குழுவாக தொடர்ந்து செயற்படுவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று அறிவித்தது.
தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிகளைக் கொண்ட காபந்து அரசாங்கத்தை நியமிப்பதற்கான கட்சியின் அழைப்புகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் செவிசாய்க்காததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பொதுமக்களின் எதிர்ப்புக்கள் வலுத்ததையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைத்துக் கட்சிக் காபந்து அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு அழைப்பு விடுத்தது.
இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கம் பதவி விலக கோரி பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)