பொலிஸ் மா அதிபர்,
பொலிஸ் தலைமையகம்,
கொழும்பு 01.
காலி முகத்திடலுக்கு முன்பாக நடைபெற்ற #gotagohome அமைதி ஆர்ப்பாட்டத்தை கலைக்க இலங்கை இராணுவம் தயாராகி வருகிறது, கைது செய்து கலைந்து செல்லும் முயற்சி குறித்து நம்பகமான வட்டாரத்திலிருந்து அறிந்து கொண்டேன்.
இது உண்மையாக இருக்குமானால், அதனைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் உங்களை வலியுறுத்துகிறேன். தற்போதுள்ள அரசாங்கத்தை விமர்சிக்க மக்களுக்கு உரிமை உண்டு, இராணுவ ஆட்சியில் பலாத்காரம் மற்றும் இராணுவ அடக்குமுறையை தவிர ஜனநாயக ஆட்சியில் அத்தகைய உரிமையை பயன்படுத்த முடியாது.
அதற்கிணங்க, இலங்கை இராணுவத்தைப் பயன்படுத்தி இவ்வாறான செயலை மேற்கொள்ள முயலும் ஜனநாயக விரோத சக்திகளுக்கு எதிராக அச்சமின்றி சட்டத்தை அமுல்படுத்துமாறு கௌரவ பொலிஸ் மா அதிபரை இக்கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தலைவராகவும் பொறுப்பான அரச சேவையாளராகவும் நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள்.
இத்தகைய ஜனநாயக விரோதச் செயலை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நீங்கள் ஆதரித்தால், உங்களுக்கும், அதனுடன் தொடர்புடைய இராணுவ வீரர்களுக்கும் எதிராக இழைக்கப்பட்ட மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கடிதத்தின் நகல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இதன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இப்படிக்கு,
ஜனாதிபதி சட்டத்தரணி
மைத்திரி குணரத்ன
மொழிபெயர்ப்பு : யாழ் நியூஸ்