கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையுடன் இணைந்து ரூ. 5000 பெறுமதியான உணவு மற்றும் அத்தியாவசிய 10,000 பொதிகள் 16 இலங்கை அரசியல் கட்சிகள் மூலம் சுமார் 10,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இலங்கைக்கான சீனத் தூதுவர், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெளிநாட்டு உறவுகளின் தலைவர் கிறிஸ் பல்தசார் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நேற்று தெஹிவளை – கல்கிசை மாநகர சபை வளாகத்தில் முதலாவது நிகழ்வு இடம்பெற்றது.
இந்த இக்கட்டான காலங்களில் இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்க முன்வந்த சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்து நாமல் ராஜபக்ச ட்வீட் செய்திருந்தார். (யாழ் நியூஸ்)