பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போராட்டம் நடத்தும் மக்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“ஆம் அங்கு மக்கள் போராட்டம் நடக்கிறது. தீர்வுகளைக் காண அவர்கள் கலந்துரையாடல்களுக்கு வர வேண்டும்” என்று பிரதமர் இன்று ஒரு நேர்காணலின் போது கூறினார்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடாத பட்சத்தில், தீர்வு கிடைக்காமல் போராட்டம் தொடரும் என்று பிரதமர் கூறினார்.
“இந்த குழுக்களுக்கு நான் பரிந்துரைப்பது அரசாங்கத்துடன் கலந்துரையாட வர வேண்டும். அவர்கள் நம்பக்கூடிய அரசாங்கத்தில் உள்ள சில பிரிவுகளுடன் கலந்துரையாடலாம். இல்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தை தொடரலாம்” என்றார்.
கடந்த வாரம், பிரதமர் ராஜபக்ஷ, காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார், அதை குழுக்கள் உறுதியாக நிராகரித்துள்ளன. (யாழ் நியூஸ்)