பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி சங்கப் பேரவையொன்றை வெளியிடுவதற்கு சங்க மாநாடு ஒன்று கூட்டப்படும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரம் இதில் பங்கேற்க மறுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மகாநாயக்கர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் ஆலோசனையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாகவும், பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று ராஜபக்ச குடும்பத்தில் சண்டையும் அதிகாரப் போட்டியும் நிலவுவதாக அவர் கூறினார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)