பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீளும் வரை நகரங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த முடிவால் தினசரி எரிவாயு விநியோகம் 60,000 முதல் 80,000 சிலிண்டர்களில் இருந்து 30,000 சிலிண்டர்கள் வரை குறைக்கப்படும் என்றும், 27 சதவீத எரிவாயு நுகர்வோர் மட்டுமே எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில், நாட்டின் மாதாந்த எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மாதமொன்றுக்கு 30 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதால், அவ்வாறான செலவுகளை மேற்கொள்ள முடியாது எனவும், நாட்டை மீளக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
விறகு உள்ளிட்ட மற்ற எரிபொருட்களை பயன்படுத்தக்கூடிய அனைத்து மக்களும் நாட்டு நலனுக்காக எரிவாயுவை விட்டு வேறு எரிபொருளுக்கு மாற வேண்டும் எனவும் தற்போதைய நிலவரத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)