மேலும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் விலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் விலை!

எரிபொருள் விலைகள் மற்றும் வரி விகிதங்கள் அடுத்த ஆறு மாதங்களில் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் உதவ தயாராக இருப்பதாக அவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைக்க இலங்கை தயாராகி வருவதாகவும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைக் காலத்திற்கு விண்ணப்பிக்கவும் அவர் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.

ஜூலை மாதம் செலுத்த வேண்டிய $1 பில்லியன் பத்திரத்தை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

அடுத்த ஐந்து வாரங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.