ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஓரிருவரைத் தவிர, அனைவரும் தற்காலிகப் பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் விரைவில் பதவி விலகத் தயாராகி வருகின்ற போதிலும், குடும்ப அழுத்தத்தினால் அவர் தொடர்ந்தும் பதவியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் ஓய்வெடுக்க வேண்டும் என வைத்திய ஆலோசனை பெற்ற போதிலும், குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமர் பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறாவிட்டால் பதவியில் நீடிக்கப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மகாநாயக்கர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மகாநாயக்கர்களிடம் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)