தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தொண்டமான் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சுதந்திரமாக இருக்க கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக செயற்படுவதற்கான தனது முடிவை அறிவித்த இரண்டாவது கட்சி இ.தொ.கா ஆகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) நேற்றைய தினம் அரசாங்கத்தில் இருந்து விலகியதோடு, இன்று பாராளுமன்றம் கூடும் போது சுயேச்சைக் குழுவாக செயற்படும் என அறிவித்தது.
இ.தொ.கா. இன் ஜீவன் தொண்டமான் தனது அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ததோடு, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் போராட்டங்கள் காரணமாக இராஜினாமா செய்திருந்த பல இராஜாங்க அமைச்சர்களுடன் இவருக் இராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நடத்தை தொடர்பில் பொதுமக்கள் வீதியில் இறங்கி அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில், இ.தொ.கா நேற்று ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னரே ஜீவன் தொண்டமான் பதவி விலகியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் மலையகத்தில் பல்கலைக்கழகமொன்றை ஸ்தாபித்தல் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)