5,000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பலொன்று பணம் செலுத்த முடியாததால் அதனை திருப்பி அனுப்ப வேண்டியுள்ளதாக Laughs Gas PLC இன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக கடன் கடிதம் திறக்க முடியாத காரணத்தினால் கப்பலை திருப்பி அனுப்ப வேண்டியுள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலைமை காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு லாஃப்ஸ் எரிவாயுவை வழங்க முடியாது என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)