இலங்கையில் அமுல்படுத்தப்படும் தினசரி மின்வெட்டுகளின் காலம் எதிர்வரும் நாட்களில் மேலும் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை (05) முதல் ஏப்ரல் 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் சில முக்கிய இடங்களைத் தவிர, ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் 6 1/2 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும்.
குறித்த காலப்பகுதியில் கொழும்பின் முக்கியமான பகுதிகளில் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் என PUCSL தெரிவித்துள்ளது.
A,B,C,D,E,F,G,H,I,J,K,L போன்ற வலயங்கள் -
காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 4 மணி நேரம் மற்றும் மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள்
P,Q,R,S,T,U,V,W போன்ற வலயங்கள் -
காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 4 மணி நேரம் மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள்
C,C,1 போன்ற வலயங்கள் - காலை 6.00 மணி முதல் 9.30 மணி வரை 3 மணி 30 நிமிடங்கள். (யாழ் நியூஸ்)