றம்புக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த இந்திக பிரசாத் சுபசிங்க என்ற இளைஞர் இன்று (23) வௌ்ளை வான் ஒன்றில் வந்த குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார்.
தர்மபால வீதி, பின்னவலவத்தை, றம்புக்கணை முகவரியில் அமைந்துள்ள குறிப்பிட்ட நபரின் வீட்டுக்கு இன்று காலை பத்து மணியளவில் வௌ்ளை வானில் வருகை தந்த அடையாளம் தெரியாத குழுவினர் அவரைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் ரம்புக்கனை - பின்னவலையை சேர்ந்த இளைஞர் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
அவரை கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.