இருப்பினும், இப்போது கோபத்திற்கான நேரம் மட்டுமல்ல, தீர்வுக்கான நேரம் இது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நாமலின் கூற்றுப்படி, ஜனாதிபதியும் அரசாங்கமும் நாட்டிற்கான அவர்களின் திட்டங்கள் குறித்து இன்னும் வெளிப்படையாக குரல் எழுப்பியிருக்க வேண்டும். "எங்களிடம் உள்ள மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, நாங்கள் மக்களுக்கு தெரிவிக்கவில்லை என்பது - அதனை நான் ஒப்புக்கொள்கிறேன்," என்று அவர் ThePrint இடம் கூறினார்.
ThePrint க்கு வழங்கிய நேர்காணலில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் நாமல், இலங்கையில் முறையான மாற்றத்தின் அவசியம் குறித்து பேசினார்.
அவரைப் பொறுத்தவரை, முற்போக்கான தலைமை காலாவதியான நிர்வாக அமைப்பு மற்றும் ஏராளமான சிவப்பு நாடாவால் பின்வாங்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகம் தேவையான அளவு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்பதையும் - ஜனாதிபதியின் தற்போதைய மௌனம் நிலைமைக்கு உதவாது என்பதையும் ஏற்றுக்கொண்ட நாமல், "ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களைப் பற்றி அவர்களிடம் கூற வேண்டும்" என்றார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சரும் அவரது மற்றுமொரு மாமாவுமான பசில் ராஜபக்ச நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் அதனைச் சமாளிப்பதற்கான அவரது திட்டங்கள் குறித்தும் அதிகம் குரல் கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் ஏன் கோபப்படுகிறார்கள் என்பதை தாம் புரிந்து கொண்டதாகவும், எதிர்ப்பு தெரிவிப்பதற்கான அவர்களின் உரிமையை ஆதரிப்பதாகவும் நாமல் ThePrint க்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அத்தகைய கோபம் பயனற்றது மற்றும் மேலும் நெருக்கடியை உருவாக்கக்கூடும் என்று அவர் மேலும் கூறினார் - குறிப்பாக எதிர்ப்புக்கள் சுற்றுலாப் பயணிகளை ஒதுக்கி வைக்கக்கூடும், இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவக்கூடும் என்றார். (யாழ் நியூஸ்)