ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழையும் அனைத்து வீதிகளும் நிரந்தர மற்றும் தற்காலிக வீதித் தடைகளைப் பயன்படுத்தி பொலிஸாரால் தடை செய்யப்பட்டுள்ளன.
லேக்ஹவுஸ் முன்றலில் உள்ள நெலும் மாவத்தை பகுதியின் போக்குவரத்து முற்றாக மூடப்பட்டுள்ளதுடன் கலதாரி ஹோட்டலுக்கு அண்மித்த வீதியும் பொலிஸாரால் தடைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வன்முறை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்திற்கு நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், நாளை (25) காலை 9.00 மணி வரை யோர்க் வீதி, வங்கி அவென்யூ, லோட்டஸ் அவென்யூ உள்ளிட்ட பல பாதைகளுக்குள் நுழைய தடை விதித்துள்ளது. (யாழ் நியூஸ்)