மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மின் துண்டிப்பை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் உள்ள மின்மாற்றி கம்பத்தில் ஏறி தனிநபர் போராட்டம் செய்துவந்த நிலையில் குறித்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது அந்த நபர் மது அருந்திய நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (யாழ் நியூஸ்)
உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமத்தில் இணைவதை தவிர்த்துக்கொள்ளவும்.