தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்மொழிந்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி, தமிழக முதல்வர் வியாழக்கிழமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசினார், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசின் திட்டத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மலைநாடு ஆகிய இடங்களில் உள்ள தமிழர்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் அரிசி, தானியங்கள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசு வழங்கத் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய இராஜதந்திர தூதரகங்கள் ஊடாக பொருட்களை விநியோகிக்குமாறும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் , மார்ச் 31ஆம் திகதி இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசியதை நினைவு கூர்ந்தார், மேலும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்து கவலை தெரிவித்தார்.
மேலும், இலங்கை பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழக முதல்வரிடம் தெரிவித்த கவலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். (யாழ் நியூஸ்)