பிரதமர் பதவியில் இருந்து கண்ணியத்துடன் இராஜினாமா செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக நீக்கும் வரை காத்திருக்காமல் கண்ணியத்துடன் பதவி விலகுமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவர் தொடர்ந்தும் பதவியில் இருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணையை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்குவது அவருக்கு ஏற்புடையதல்ல எனவும் அதற்கு முன்னர் பதவி விலகுமாறு பணிவுடன் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)