தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற நிலையான வேலைத்திட்டத்துடன் காபந்து அரசாங்கத்தின் கீழ் நாட்டை ஆட்சி செய்யும் திட்டம் முன்னெடுக்கப்படாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
அடுத்த வாரத்திற்குள் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், 14 உறுப்பினர்களும் வகிக்கும் அனைத்து அரசாங்கப் பதவிகளையும் இராஜினாமா செய்துவிட்டு அடுத்த சில நாட்களில் பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு நிலையான வேலைத்திட்டத்துடன் காபந்து அரசாங்கத்தின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அடுத்த சில நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கருத்து தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து நாட்டின் முன்னேற்றம் உள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்திலேயே இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)