தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சிறைக்கு அனுப்புவதே தவிர வீட்டுக்கு அல்ல என சிங்கள பாடகர் ஷிஹான் மிஹிரங்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குலத்தின் குடும்ப உறுப்பினர்களையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என மிஹிரங்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்களும் அவர்களது நெருங்கிய குடும்பத்தினரும் அவர்கள் எடுத்த ஒவ்வொரு சதமும் திருப்பிக் கொடுக்கப்படும் வரை நாட்டில் இருக்க வேண்டும் என்றார்.
ராஜபக்சக்கள் எப்பொழுதும் நாட்டை விட்டு ஓடியவர்கள் என்றும், இதற்கு முன்னரும் இவ்வாறான நெருக்கடிகளில் இருந்து தப்பியவர்கள் என்றும் கூறிய ஷிஹான் மிஹிரங்க, தற்போதைய நெருக்கடியிலிருந்து தப்பிக்க அவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினார்.
இந்த அமைதியான போராட்டங்களை ராஜபக்சக்கள் நிலைமையில் இருந்து தப்பிக்க முடியாத நிலைக்கு கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் உழைக்க வேண்டும் என்றார்.
அவர்களை இந்த நாட்டில் வைத்திருப்பது எங்களின் வெற்றி, இல்லை என்றால் இந்த போராட்டத்தில் நாம் தோல்வியடைந்துள்ளோம் என ஷிஹான் மிஹிரங்க சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் பொதுமக்களிடம் போராட்டங்களைத் தொடருமாறும், முடிந்தால், தீர்வு எட்டப்படும் வரை குறைந்தது ஐந்து ராஜபக்சக்களையாவது நாட்டில் வைத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி மற்றும் அவரது ஆட்சிக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்றுவரும் பொது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)