இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குழுவினர் புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் இன்று சந்தித்தனர்.
வத்திக்கானில் நடந்த புனித ஆராதனைக்குப் பிறகு, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார்.
இலங்கை அரசாங்கம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணத் தவறியமையினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்களுக்காகவும் பிரார்த்திப்பதற்காகவும் புனித ஆராதனை நடைபெற்றது.
புனித பேதுரு பேராலயத்தில் இன்று நடைபெற்ற புனித ஆராதனைக்கு கொழும்பு பேராயர், மால்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் புனித பாப்பரசர் பிரான்சிஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
2019 ஈஸ்டர் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர் உட்பட 60 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் பேராயர் வெள்ளிக்கிழமை வத்திக்கானுக்கு புறப்பட்டார்.
இலங்கையின் நெருக்கடியான தருணத்தில் சமூகத்துடன் தனது ஒற்றுமையை வெளிப்படுத்திய பாப்பரசர் பிரான்சிஸின் அழைப்பின் பேரில் குழு வத்திக்கானுக்கு புறப்பட்டது.
2019 ஆம் ஆண்டு 269 பேர் கொல்லப்பட்ட மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் 3 வது ஆண்டு நினைவு தினம் ஏப்ரல் 21 அன்று இலங்கையில் அனுசரிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)