மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் ஜெனரேட்டர்களை பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றன, ஆனால் அவற்றுக்கான எரிபொருளை பெறுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என தொழிற்சங்க செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறையினால் சில வங்கி நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இரவில் வங்கிகள் மூடப்பட்ட நிலையிலும் ATMகள் செயல்பட வேண்டும் என்றாலும், தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அது சவாலாக இருப்பதாக அவர் கூறினார்.
இதே நிலை நீடித்தால் மின்சாரம் தடைப்படும் போது ATM இயந்திரங்கள் செயலிழந்து விடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சில வங்கிகள் இரவில் ATM இயந்திரங்களை மூடுவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)